தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., இத யாரும் எதிர்பார்க்கல.., அனல் பறக்கும் TVK அரசியல் களம்!!

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” என்று அறிவித்த நிலையில், தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவரின் அரசியல் வருகையை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கட்சியின் சின்னம் மற்றும் கொடி குறித்து தலைவர் விஜயிடம் இருந்து எப்போது அறிவிப்பு வரும் என்று அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த பொது கூட்டத்தில் வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொது தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பொதுவாக ஒரு கட்சியை தொடங்கும் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேச தயக்கம் காட்டுவார்கள். ஆனால் தற்போது தவெக தலைவர் விஜய், செய்தியாளர்கள் பத்திரிகையாளர்கள் வாரத்தில் ஏழு நாட்கள் தன்னை சந்தித்து பேச ஏற்பாடு செய்துள்ளாராம். தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முதல் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே இவங்க தான்.., நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்!!

Leave a Comment