‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!
‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமையல் மூலம் பிரபலமானவர் தான் தேனி மாவட்டத்தை சேர்ந்த டாடி ஆறுமுகம். அவர் வில்லேஜ் ஃபுட் பேக்டரி (Village Food Factory) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமையல் மூலம் மக்களை கவர்ந்த டாடி ஆறுமுகம் சேனலை கிட்டத்தட்ட 4.75 மில்லியன் Follow செய்து வருகின்றனர். அதேபோல் அவரது முகநூல் பக்கத்தை 53 லட்சம் நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் திடீரென ஆபாச புகைப்படங்கள் ஸ்டோரியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம், ” என்னுடைய முகநூல் பக்கத்தில் மர்ம நபர்கள் அருவருக்கத்தக்க ஆபாச புகைப்படங்களை ஸ்டோரியில் பகிரப்பட்டு வருகிறது. அதை எத்தனை முறை எடுத்தாலும் மீண்டும் பகிரப்படுகிறது. இதனால் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். முகநூல் நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும், நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.