எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிராவோ – கண் கலங்கி வெளியிட்ட வீடியோ!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் பவுலிங் என அதிரடி காட்டி வந்தவர் தான் டுவைன் பிராவோ. இவர் ஒரு விக்கெட் எடுத்த பிறகு ரசிகர்களை கவரும் விதமாக ஸ்டைலாக ஒரு ஆட்டத்தை போடுவார். அதை பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த அவர் அதிலும் இருந்து ஓய்வு பெற்று, CSK அணிக்கு பௌலிங் பயிற்சியாளராக வந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணிக்காக பிராவோ விளையாடி வந்தார். இதனை தொடர்ந்து கடந்த  24-ந் தேதி நடந்த போட்டியின் போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Also Read: TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

இதனால் பேட்டிங் செய்து கொண்டிருந்த பிராவோ பாதியில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. மேலும் இந்த போட்டி தான் தான் விளையாட போகும் கடைசி போட்டி என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக பிராவோ தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா

Leave a Comment