லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி.., கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை.., 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல்!!
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
உலக பல நாடுகளில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு தவறான சில விஷயங்களை செய்து வருகிறார் என்று புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. லஞ்சத்தை ஒழிக்க பலரும் பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கிய நிலையில் அவரை லஞ்சம் ஒழிப்பு துறை கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஹைதராபாத் எஸ்டி நலப்பிரிவு வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் ஜெகஜோதி. அவரிடம் தெலுங்கானா மாநிலத்தில் அரசு கட்டுமான பணிகளை டெண்டர் எடுத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர் கங்காதர், ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட அரசு ஆண்கள் விடுதிக்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ஜெகஜோதி ஏற்கனவே டெண்டர் முடிக்கப்பட்ட நிலுவை தொகை தர வேண்டும் என்றால் எனக்கு ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இது குறித்து கங்காதர் லட்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து லட்ச ஒழிப்பு துறையினர் சொன்னது போல் ஒரு லட்சம் கொடுக்க முடியாது கம்மி பண்ணி சொல்லுங்கள் என்டர் கேட்டுள்ளார். அதற்கு ஜெகஜோதி ரூ.84,000 வழங்குமாறு கேட்டு அதை ஆபிஸ்க்கு கொண்டு வருமாறு கேட்டுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அழுது புலம்பிய அதிகாரியை சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சோதனை நடத்திய போது அவரிடம் கணக்கில் வராத 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், ரூ.65 லட்சம் ரொக்கம், சில சொத்து ஆவணங்களையும் இருந்ததை தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.