பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர போகிறதா?… ரசிகர்கள் ஷாக்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேமஸ் சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வித்யா நம்பர் 1 சீரியல்

வெள்ளித்திரைக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு சின்னத்திரைக்கும் இருந்து வருகிறது. புதுப்புது சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து மக்களின் கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல் தொடர்ந்து என்டேர்டைன்மெண்ட் செய்து டிஆர்பியை பெருக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் டிஆர்பிக்காக சண்டை போட்டு வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தான். இந்நிலையில் ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பேமஸ் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.

அதாவது  கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஆரம்பித்த வித்யா நம்பர் 1 தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறதாம். இந்த சீரியலின் கிளைமாக்ஸ் சீன் தான் தற்போது ஷூட் போய் கொண்டிருக்கிறதாம். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரா என்ற சீரியல் விரைவில் வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

காவல்துறையிடன் வெடித்த மோதல்.., பரிதாபமாக பலியான இளம் விவசாயி.., போராட்டம் நிறுத்தம்!!

Leave a Comment