Home » பொது » 12ஆம் வகுப்பு பொது தேர்வு 2025 | தேர்வுக்கு முன் இதை கண்டிப்பாக படிக்கவும் || All The Best

12ஆம் வகுப்பு பொது தேர்வு 2025 | தேர்வுக்கு முன் இதை கண்டிப்பாக படிக்கவும் || All The Best

12th Public Exams Tips 2025 for Students

அரசு பொதுத்தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கும் அன்பு +2 குழந்தைகளுக்கு இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும்.🙏🙏🙏💐💐💐

12ஆம் வகுப்பு பொது தேர்வு 2025 | தேர்வுக்கு முன் இதை கண்டிப்பாக படிக்கவும் || All The Best

ஆசிரியர்கள் 1 வருட காலங்கள் கற்பித்திருக்கிறார்கள்.

காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வுகள் என எழுதி நிறைய பயிற்சி பெற்று இருக்கிறீர்கள்.

ஆகவே பயம் வேண்டாம். பதற்றம் வேண்டாம்.👍

தேர்வு மையத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்று சேரும் வகையில் வீட்டில் சீக்கிரமே தயாராகி புறப்பட்டு விடுங்கள்.

படித்தவற்றை அசை போட்டுக் கொண்டே இருங்கள்.

சிக்கலான கடினமான விடைகள் கருத்துகளை (concepts) கடைசி நேரத்தில் கூட நண்பர்களோடு பேசுங்கள். “பளிச்” சென ஒரு புரிதல் ஏற்படும். மதிப்பெண் பெற்றுத் தரும்.

காலை 9.30 மணிக்கு அழைப்பு மணி அடிக்கும்.

தலைமை ஆசிரியர் தேர்வர்கள் அனைவரையும் அழைத்து அறிவுரைகள் வழங்குவார்.

கூர்ந்து கவனியுங்கள்.

அதன்படி செயல்படுங்கள்.🔴

தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உங்களிடமும் அன்புடனும் கனிவுடனும் நடந்து கொள்வார்கள்.

அதே வேளை நாம் 100% கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் பரிசோதித்து அனுமதிப்பார்கள்.

பெல்ட் & காலணிகளை அறைக்கு வெளியில் விட வேண்டும்.

சாதாரண மணி மட்டும் காட்டும் கைக்கடிகாரம் மட்டுமே அனுமதிப்பார்கள். (Digital Watch அணிய வேண்டாம் 🔴)

KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

9.45 – 10.00 மணி உங்கள் மேசைக்கு அடியில் சாக்லேட் பேப்பர் or துண்டுத்தாள் (Bit Paper) ஏதும் உள்ளதா ? என பரிசோதித்து … அவ்வாறு இருப்பின் 10 மணிக்கு முன் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விடுங்கள். (மிக மிக முக்கியம்🔴 யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பாதிக்கப்படக் கூடாது)

10 மணிக்கு கேள்வித் தாள் பெற்ற உடன் உங்கள் தேர்வு எண்ணை எழுதி 10.10 வரை 10 நிமிடம் கேள்வித் தாள் முழுவதையும் பொறுமையாக வாசித்து விடுங்கள். (10 நிமிடம் Silent Reading Time – முழு அமைதி)

கேள்வித்தாளில் உங்கள் Register Number தவிர வேறு எவ்வித குறிப்புகளும் எழுதக் கூடாது.🔴🔴🔴

நீங்கள் படித்த கேள்விகள் நிறைய வந்திருக்கும். மகிழ்ச்சி 👍

ஒன்றிரண்டு கேள்விகள் நீங்கள் படிக்காத கேள்விகளும் வந்திருக்கலாம்.😞 பரவாயில்லை. பதற்றம் வேண்டாம்.

10.10 மணிக்கு விடைத்தாள் தருவார்கள்.

உங்கள் விடைத்தாளில்

பெயர்
Photo
Reg. No.
பாடம்
Medium

தேர்வுத் தேதி ஆகிய 6 விடயங்களும் சரியாக உள்ளதா ? முதன்மை கண்காணிப்பாளர் Signature உள்ளதா? உங்கள் விடைத்தாளில் 30 பக்கங்கள் (Tamil and English = Ruled / All other Subjects = Unruled) வரிசையாக சரியாக உள்ளதா ? என்பதை சரிபார்த்து

உங்கள் photo க்கு கீழ் உங்கள் Signature போடவும்.

Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்!

Biology பாடத்திற்கு மட்டும் 14 + 4 + 14 = 32 பக்கம் என இரண்டு Main Booklets ம் இடையில் ஒரு Bio – Botany க்கான Additional Sheet ம் இருக்கும்.

Accountancy பாடத்திற்கு 14 Unruled Pages-ம் 16 Accountancy pages -ம் என 30 பக்கங்கள் இருக்கும்.

10.15 மணிக்கு 5 Times மணி அடிக்கும்.
தேர்வு எழுத தொடங்கலாம்.💐💐💐

முதலில் தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை எழுதி முழு மதிப்பெண்கள் பெற முயலுங்கள்.👍👍👍

நிதானமாக அழகாக குண்டு குண்டாக விடைகளை எழுதுங்கள்.👌👌👌

ஒவ்வொரு விடை எழுதி முடித்தவுடன் அடிக் கோடு போடுங்கள்.

கேள்வி எண்களை மறக்காமல் சரியாக எழுதுங்கள்.

சரியாக விடை தெரியாத கேள்விகளை கடைசி அரை மணி நேரத்தில் யோசித்து அறிந்தவரை தெரிந்தவரை விடை எழுதுங்கள்.👍

10.45 11.15 11.45 12.15 12.45 என அரை மணி நேரத்திற்கு ஒரு மணி என 5 முறை மணி அடிப்பார்கள்.

மதியம் 1.10 மணிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிப்பார்கள்.

12th Public Exams Tips 2025 for Students
12th Public Exams Tips 2025 for Students

கூடுதல் விடைத்தாள் பெற்றிருந்தால் துளையிட்டு நூல் கொண்டு 1.10 மணிக்கு கட்டி விட்டுத்தான் ….🔴🔴🔴 மேலும் விடை எழுத விரும்பினால் தொடர வேண்டும்.

சரியாக 1.15 மணிக்கு நீண்ட மணி அடிக்கும் போது விடை எழுதுவதை நிறுத்தி விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும்.

அறைக் கண்காணிப்பாளர் உங்கள் அறையில் உள்ள 20 பேரின் விடைத்தாள்களை சேகரித்து …. சரிபார்த்து …

ok …. புறப்படுங்கள் என கூறும் வரை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் அமைதியாக காத்திருக்க வேண்டும்.🔴🔴🔴

விடைகளை தவறாக எழுதி அடித்திருந்தால்

கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் பண்ணுங்க!

“மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது ” என மட்டும் எழுத வேண்டும். (Sign or Reg.No. போட கூடாது🔴)

விடைத்தாளின் எந்த இடத்திலும் உங்கள் பெயர் & தேர்வு எண் எழுதக் கூடாது.🔴

Rough work ஏதும் செய்வதானால் விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன் படுத்தவும்.

கருப்பு மற்றும் ஊதா ஆகிய இரண்டு வண்ண பேனாக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அலைபேசி கொண்டு வரக்கூடாது.🔴

துண்டுத்தாள் வைத்திருப்பது….

அனைத்து விடைகளையும் அடித்து விடுவது …

போன்ற செயல்களை செய்யக் கூடாது.🔴🔴🔴

அவ்வாறான செயல்கள் ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு உங்கள் Result நிறுத்தி வைக்கப்படும். 🔴🔴மேலும் அடுத்த 2 அமர்வுகள் பொதுத்தேர்வு எழுத உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.🔴🔴🔴

ஆகவே 100% கண்ணியத்துடன் பொதுத்தேர்வை எழுதி சிறந்த எதிர்காலத்தில் காலடி பதிக்க வாழ்த்துகிறோம்.💐💐💐

Vivo iQOO Neo 10R Specifications: புதிய மாடல் | குறைந்த விலை || பட்ஜெட் மொபைல்!!

உங்கள் 12 வருட கால பள்ளிப் படிப்பின் அறுவடைப் பயன் இந்த பொதுத்தேர்வுகள்.

உங்கள் பெற்றோர் தாத்தா பாட்டி குடும்பத்தார் அனைவரது கனவுகளையும் மொத்தமாக கட்டி வைத்திருக்கும் மந்திரப் பெட்டி இந்த பொதுத்தேர்வு.

நீங்கள் எழுதப் போவது வெறும் தேர்வல்ல.

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் எழுதப் போகிறீர்கள்.

உங்கள் அறிவை விரிவு செய்யும் கல்லூரி வாசல் கதவுகளை திறக்கும் அற்புத சாவி இந்த பொதுத் தேர்வு.

ஆகச் சிறந்த கல்லூரிக் கதவுகளின் சாவி … உங்கள் பேனா முள்ளின் உள்ளே ஒளிந்திருக்கிறது.

7.5 கோட்டாவில் No Hostel Fees … No College Fees என முற்றிலும் தமிழக அரசின் உதவியுடன்

அப்பா அம்மாவிற்கு சிரமம் கொடுக்காமல் படிக்க ஒவ்வொரு பாடத்திலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டியிருக்கும். (Total 540)

IIT & NIT போன்ற நாட்டின் ஆகச்சிறந்த கல்லூரிகளில் சென்று படிக்க ஒவ்வொரு பாடத்திலும் 75 தேவை. (Total 450)

பாண்டிச்சேரி & திருவாரூர் மத்திய பல்கலைக் கழகங்களில் சென்று படிக்க ஒவ்வொரு பாடத்திலும் 60 தேவை. (Total 360)

சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க ஒவ்வொரு பாடத்திலும் 50 தேவை. (Total 300)

மேற்காண் தகவல்களை உங்கள் வகுப்பாசிரியரும் உங்கள் பாட ஆசிரியர்களும் அடிக்கடி உங்களுக்கு சொல்லி இருப்பார்கள்.

இருந்தாலும் கூட

இந்த கடைசி நேரத்தில் நாங்கள் செய்யும் இந்த சின்ன நினைவூட்டல்

உங்கள் மதிப்பெண் பட்டியலில் ஒரு 60 மதிப்பெண்களை கூட்டி விடும் என்ற பெரிய நம்பிக்கையில் இந்த பதிவை அனுப்பி வைக்கிறோம்.👍👍👍

Vivo T4x 5G Specifications: கம்மி விலை | அதிகம் Features | Coming Soon!!

இந்த நீண்ட Content ன் ஒவ்வொரு எழுத்திற்கும் இடையிலும்

ஆசிரியர்கள் அவர்களின் ஆசிர்வாதமும் உங்கள் பெற்றோர்களின் பெருங்கனவும் அடைகாக்கப்படுகிறது என்பதை நினைவில் இருத்தி தொடர்ந்து “புது தெம்புடன் ” ” புது உத்வேகத்துடன் ” உங்கள் தேர்வு தயாரிப்புகளை தொடருங்கள்.👍👍👍👍

வாழ்த்துகள்.💐💐💐

இப்படிக்கு செல்ல பிள்ளைகளுக்காக SKSPREAD இணையதளம் 👑

March / April 12th Public ExaminationTimetable

All the best✍

15000க்கு கீழ் Top 5 Best Smartphone! அப்புறம் என்ன உடனே ஆர்டர் போடுங்க மக்களே!!

22 வயதில் IAS ஆன இளம் பெண்கள்.., முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மைதான் போல!!

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?., அதன் அறிகுறிகள் என்ன?

2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top