பொதுவாக ஒவ்வொரு வருடமும் இந்தியர்கள் குடியரசு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடமும் வருகிற ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த தினத்தை ஜனாதிபதி முதல் பிரதமர் வரை தேசிய கொடியை ஏற்றி மரியாதை கொடுக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும். இந்த விழாவிற்கு பல அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் காவல்துறை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற ஜனவரி 26 அன்று 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அந்நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக ஜனவரி 21 முதல் ஜனவரி 28 வரை டெல்லியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்களில் ட்ரோன்கள், சிறிய விமானங்கள் பறக்க தடை என்று அறிவித்துள்ளனர்.