தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. பரிசு தொகையை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பதால் மக்கள் வருத்தமடைந்தனர். மேலும் மக்களுக்கு ஆதரவாக பல கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக முதல்வர் வழங்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் தயாராகி உள்ளது. ஆனால் மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரூ 1000 பரிசு தொகை குறித்து தகவல் வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகலாம் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பொங்கல் பரிசு தொகைக்காக பலதரப்பு கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.