2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - முழு லிஸ்ட் இதோ!!2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - முழு லிஸ்ட் இதோ!!

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள். தற்போது தமிழ் சினிமாவில் 2024 ல் பொங்கலுக்கு எந்தெந்த தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று வெளியாகும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் அதனை பற்றிய தகவல்களின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். கேப்டன் மில்லர் திரைப்படத்தை முதலில் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது. பிறகு இந்த தேதி தள்ளிவைக்கப்பட்டு பின் அதிகாரப்பூர்வமாக பொங்கல் 2024 ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் இயக்கியுள்ளார் மற்றும் ஜீ.வி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரெம்ப நாளாக போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ள திரைப்படம் அயலான். மேலும் அயலான் திரைப்படத்தின் CG பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. A .R. ரஹ்மான் இசையமைப்பில் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இந்தப்படத்தை சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலன்று வெளியாக உள்ளது. லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த லால் சலாம் திரைப்படம் வரவுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் A .R. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

JOIN WHATSAPP CLICKI HERE
2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் அரண்மனை 4. தற்போது இந்த படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. அதனால் அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம் தான்.

வெள்ளத்தால் தத்தளிக்கும் நெல்லை மாவட்டம்.., உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய் – வெளியான தகவல்!!

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள். இந்த பொங்கல் ரேஸில் எந்த படம் வெற்றி பெரும் என்று நீங்கள் நினைக்கீறிர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *