இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 25  பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் புண்ணிய ஸ்தலமான   ராமேஸ்வரம் கடல் பகுதியில் வாழும் மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது அடிக்கடி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இலங்கை நீதிமன்ற நீதிபதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஒரு மீனவருக்கு மட்டும் கிட்டத்தட்ட ஆறு  மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

அதாவது  கடந்த மாதம் 21ம் தேதி, மீண்டும் எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2 விசை படகுகளை அரசுடைமை ஆக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு…, நாளை வரை தான் கெடு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *