எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள்.., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!
பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை தொடர்ந்து எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணையை நீதிமன்றம் தாமாக முன்வந்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றங்களை வலியுறுத்தியது. அதன்படி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணை வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ” தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. அதன்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக இருக்கும் வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.