IPL 2024 Today Match GT vs PBKS உள்ளூர் ஆதிக்கத்தை தொடருமா குஜராத் இதோ ஆட்டத்துக்கு முன் ஒரு பார்வை !
IPL 2024 Today Match GT vs PBKS : இன்று நடக்கும் 18வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் மோதுகிறது. மாலை 7.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. போட்டிக்கு முன் அவர்கள் கடந்து வந்த பாதை எப்படி வாங்க பாக்கலாம்.
IPL 2024 Today Match GT vs PBKS
குஜராத் டைட்டன்ஸ் :
2023 சாம்பியனான GT முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியது. பின்னர் CSKவிடம் தோற்றது. போன ஆட்டத்தில் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அணியை பொறுத்தவரை கேப்டன் கில், சகா, டேவிட் மில்லர் போன்றவர்கள் பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகின்றனர். பந்து வீச்சில் மோஹித் சர்மா மிரட்டி வருகிறார். புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில உள்ளது.
லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!
பஞ்சாப் கிங்ஸ் :
முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அனால் அதன் பின்னர் பெங்களூரு மற்றும் லக்னோவிடம் செம அடி வாங்கி தோல்வி கண்டது. குறிப்பாக இந்த அணியின் பந்து வீச்சு சுமாராக உள்ளது. போன ஆட்டத்தில் லக்னோ அணியை 199 ரன்கள் வாரி வழங்கியது. பின்னர் 178 ரன்கள் மட்டுமே அடித்து சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.பேட்டிங்கை பொறுத்தவரை தவான் மற்றும் ஜானி சூப்பர் தொடக்கம் தருகின்றனர். ஆனால் பின் வரும் வீரர்கள் சொதப்பி வருகின்றனர். பௌலிங்கை பொறுத்த வரை அர்டீப் சிங் , ஹர்சல் படேல், வலு சேர்ப்பதாக உள்ளனர்.
வெற்றி யாருக்கு :
குஜராத் டைட்டன்ஸ் – 56 %
பஞ்சாப் கிங்ஸ் – 44 %
இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 3 முறை ஆடியுள்ளனர். இதில் குஜராத் 2 முறையும் பஞ்சாப் 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது. இன்றைய போட்டி குஜராத் ஆமதாபாத்தில் நடப்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.