பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? – கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்களை விட 60 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு,மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ள ஆலோசனைக்குப் பிறகே பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்த தகவல் தெரியவரும்.

நரேந்திர மோடி பிரதமர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!

மேலும் இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாக்காக்கள் தங்களுக்கு ஒதுக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment