தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் – ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வைத்து 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ் ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

இதனையடுத்து மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியின் ஆலோசனையின் படி கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்சித்தார்த் மற்றும் கோபிநாத் தலைமையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்படுகிறார்.

மேலும் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தனும், மாநில துணை தலைவராக டி.இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டியின் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment