Home » செய்திகள் » சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து – கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து – கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

மேம்பாட்டு பணி காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சமன் செய்ய கூடுதலாக மாநகரப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நாளை முதல் 55 மின்சார ரயில் சேவை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் கூடுதலாக மாநகரப்பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட ஒரு மணி நேரத்திற்கு 10 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் – ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

இதனை தொடர்ந்து நாளைமுதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு பணி நடைபெறுவதால் கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே உள்ள இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top