பாகிஸதான் அனுப்பிய சீன PL15 ஏவுகணை! இந்திய விஞ்ஞானிகள் அக்கு அக்காக கழற்றி ஆராய்ச்சி…!
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சீன PL15 ஏவுகணை, சிந்தாமல் சிதறாமல் இந்தியாவில் கிடைத்துள்ள நிலையில், அதை இந்திய விஞ்ஞானிகள் அக்கு அக்காக கழற்றி ‘ரிவர்ஸ் இஞ்சினியரிங்’ செய்து வருகிறார்களாம்.
Chinese PL15 missile:
இந்த ஏவுகணை ‘பெய்டு’ எனப்படும் சீன செயற்கைகோள் வழிகாட்டுதல் மூலம் இயங்குகிறது. மேலும் மிக நுட்பமான ‘AESA’ எனும் ‘Active Electronically Scanned Array’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதனால் இந்த ஏவுகணைகளால் மிக சக்தி வாய்ந்த ‘ஜேமர்’ கருவிகளில் இருந்தும் கூட தப்பிக்க இயலும் என்கிறார்கள்.
அது மட்டும் அல்ல Dual Pulse Rocket Motor எனப்படும் இரட்டை மோட்டார்களோடு, திட எரிப்பொருள் பயன்படுத்தி, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் இது சுமார் 400 கி.மீ. வரை செல்லக்கூடியது.
இந்த ஏவுகணையை செலுத்திய பின், செல்லும் வழியிலேயே இது படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதை கண்காணித்து அவசியப்பட்டால், செல்லும் பாதையையும் மாற்றி அமைக்கலாம்.
இந்த ஏவுகணைகளை வைத்து போர் விமானங்கள்,’பாம்பர்கள்’ எனும் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் விலைமதிப்புள்ள AWACS அமைப்புகளையும் அழிக்கலாம்.
தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தற்போது அமெரிக்கா உட்பட பல நாடுகள், இந்தியாவில் சிந்தாமல் சிதறாமல் கிடைத்துள்ள PL15 ஏவுகணையை, ஆய்வு செய்வதற்கு தங்களுக்கும் தருமாறு கேட்டுள்ளனவாம். ஆனால் இந்தியா மறுத்துள்ளதாக செய்தி.
இதில் ஹைலைட் என்னவென்றால், இத்தனை சக்தி வாய்ந்த இந்த ஏவுகணைகளை, இந்தியா ஆகாஷ்தீர் வான் தடுப்பு கவசம் மூலம் சொல்லி சொல்லி அடித்ததுதான்.
PL15 இந்தியாவில் படுதோல்வி அடைந்திருப்பதை பார்த்து விட்டு, அதை தாங்க இயலாமல், பாக்கிஸ்தானுக்குதான் அவற்றை உபயோகிக்க தெரியவில்லை என கதறுகின்றனவாம் சீன வட்டாரங்கள்.
ஆக மொத்தத்தில் பாக்கிஸ்தானுக்கு நாம் நிறைய நன்றி கடன் பட்டுள்ளோம்.
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Employment News in Tamil | Click Here |
அடுத்த முறை சீனனிடம் இன்னும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை பெற்று பயன்படுத்தி உதவவும். அதை ‘ஜேம்’ செய்து விழ வைத்து, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்.
Tamil Viral News Today 23rd May 2025:
- இந்தியாவில் தயாரித்த ஐபோன்களுக்கு 25% வரி ! டிரம்ப் எச்சரிக்கை!
- இந்திய கடற்படையில் மாலுமிகள் ஆட்சேர்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! கடைசி தேதி: 17-06-2025
- கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் உறுதி!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! 53 காலியிடங்கள் || சம்பளம்: Rs.57,700/-
- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-