தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2023 ! எங்கு ? எப்போது ? யார் கலந்து கொள்ள முடியும் ?
today jobs தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2023. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது இரண்டாவது முறையாக நாளை நடைபெற இருக்கின்றது. முகாம் நடை பெறும் இடம் , எங்கு நடைபெறுகின்றது , யார் கலந்து கொள்ள முடியும் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2023 ! எங்கு ? எப்போது ? யார் கலந்து கொள்ள முடியும் ?
கலைஞர் நூற்றாண்டு விழா :
தமிழ்நாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் 19.08.2023 , 28.10.2023 மற்றும் 23.12.2023 ஆகிய மூன்று நாட்கள் நடக்க இருக்கின்றது. இதில் முதல் இரண்டாவது முறையாக நாளை 28.10.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற இருக்கின்றது.
யார் கலந்து கொள்ள முடியும் :
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம். இவர்கள் இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற இருக்கின்றது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ள இருக்கும் நிறுவனங்கள் :
இம்முகாமில் வங்கி சேவைகள் , தகவல் தொழில்நுட்பம் , காப்பீடு , ஜவுளி , மருத்துவம் , கட்டிடம் , உற்பத்தி போன்ற முன்னணி நிறுவனங்களில் இருந்து 150க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்நிறுவனங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கின்றனர்.
கல்வித்தகுதி :
எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ , டிப்ளமோ , டிகிரி , செவிலியர் , தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் போன்ற அனைத்து கல்வி தகுதிகளை பெற்றவர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதியடையவர்கள் ஆவர்.
TMB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது … நேர்காணல் மட்டுமே !
பதிவு செய்யும் முறை :
நாளை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வழங்கும் நிறுவனங்களும் வேலை தேடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முகாம் நடைபெறும் நேரம் :
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற இருக்கின்றது.
முகாம் நடைபெறும் இடம் :
செஞ்சி ,
அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ,
விழுப்புரம் ,
தமிழ்நாடு .
தொலைபேசி எண் : 04146 – 226417 , 9499055906
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடைபெற இருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வேலை இல்லாத நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் Dr.சி.பழனி , இஆப தெரிவித்து உள்ளார்.