கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை.., 10 வருடம் போராடியும் பயனில்லாமல் போனதே?

தமிழ் சினிமாவில் சிங்க நடை போட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது நம்மோடு இல்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. கொரோனவால் காலமான கேப்டனின் உடல் இப்பொழுது பொதுமக்களின் பார்வைக்காக கட்சி அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மாலை அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக ஒரு விஷயத்தை செய்து வந்த கேப்டன் அந்த நல்ல விஷயம் முடிவதற்குள் அவருடைய ஆயுள் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

அதாவது, கேப்டன் விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நபர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு ஒரு வீட்டை ஆசை ஆசையாக கட்ட தொடங்கியுள்ளார். ஆனால் சில ஆண்டுகளாக வேலைகள் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது பணிகள் நடந்து 90 சதவீதம் வேலை முடிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் அந்த வீட்டில் பால் காய்ச்சியுள்ளனர்.

ஆனால் அப்போது கேப்டன் வரவில்லை. உடல்நலம் சரியான பிறகு புதிய வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என நினைத்த குடும்பத்திற்கு வெறும் ஏமாற்றமே மிச்சம். ஆசை ஆசையாக கட்டுன வீட்டில் கால் வைக்காமல் கேப்டன் இறந்து போன சம்பவம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment