அருண் விஜய்யின் தரமான செய்கை.., சைலண்டாக மாஸ் காட்டும் மிஷன் திரைப்படம்.., வெளியான புதிய அப்டேட்!!

பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் அயலான், கேப்டன் மில்லர் என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1  திரைப்படம்  அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு போட்டியாக களமிறங்கியது.

ஆனால் மற்ற படங்களை விட மிஷன் சாப்டர்  1  படத்துக்கு குறைந்த தியேட்டர் கிடைத்தது. இருப்பினும் இந்த படம் வெளியான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் பெற்று வந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிசில் கிட்டத்தட்ட 9 கோடி வசூலித்துள்ளது. மேலும் மக்கள் மிஷன் படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர்.இதனால் இப்படத்தை அதிக திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டு வருவதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   

Leave a Comment