அக்காவை லவ் பண்ணி கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய இளைஞன்.., ஸ்கெட்ச் போட்ட தூக்கிய போலீஸுக்கு அதிர்ச்சி டிவிஸ்ட்!!
தற்போதைய காலகட்டத்தில் கல்யாணம் முடிந்த கணவனோ அல்லது மனைவியோ வேறொரு ஒருவருடன் கள்ள காதல் வைத்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தனது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆழ்வான்(35) என்பவர் சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சோனியா கர்ப்பமாக இருப்பதால் அவரை பார்த்து கொள்ள அவருடைய தங்கை சொர்ணா வீட்டிற்கு வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அக்காவின் கணவர் என்று கூட பாராமல் சொர்ணா ஆழ்வான் மீது காதல் கொண்டு நெருங்கி பழகியது மட்டுமின்றி ரகசிய திருமணமும் செய்துள்ளார். மேலும் அந்த நெருங்கிய உறவால் சொர்ணா கர்ப்பம் அடைகிறாள். இதை தெரிந்து கொண்ட சோனியா சண்டை போட்ட நிலையில் இருவரும் சேர்ந்து ஆழ்வானுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆழ்வானுக்கு குடிப்பழக்கம் அதிகமான நிலையில் இரண்டு மனைவியையும் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.
இதனால் மனைவிமார்கள் தனது அப்பா வீட்டிற்கு சென்ற நிலையில், மாமனாரை கடத்தி வைத்து வீட்டுக்கு வரவில்லை என்றால் அப்பாவை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்த மனைவி, கணவன் போனை ட்ராக் செய்து ஆழ்வானை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் ஒரு அதிர்ச்சி தகவல் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அதாவது ஆழ்வான் ஏற்கனவே 2 கல்யாணம் முடித்தவர் என்றும், தற்போது ,மீண்டும் இரண்டு திருமணம் செய்துள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.