பிக்பாஸால் எழுந்த கடுமையான ட்ரோல்கள்.., விபரீத முடிவை எடுத்த சரவண விக்ரம்? அடக்கடவுளே.., அதுக்குனு இப்படியா?

உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இதில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார்.  அவரை தொடர்ந்து மணி இரண்டாம் இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார். ஆனால் மாயா தான் டைட்டில் அடிப்பார் என பலரும் கூறி வந்த நிலையில், அர்ச்சனா வாங்கியதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நான் தான் பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் என்று சுற்றி திரிந்தவர் தான் சீரியல் நடிகர் சரவண விக்ரம். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சக போட்டியாளர்கள் தூங்கிய பிறகு, மிக்சரை திருடி சாப்பிட்டு வந்தார். இதனால் நெட்டிசன்கள் மத்தியில் பல கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்தார். குறிப்பாக பல மோசமான ட்ரோல்களும் அவரை சுற்றி வந்தது. சொல்லப்போனால் சில போட்டியாளர்களும் இதை வைத்து அவரை கிண்டலடித்து வந்தனர்.

இந்நிலையில் சரவண விக்ரம் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது சரவண விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” I quit my passion” என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவர் இனிமேல் நடிக்க மாட்டார் என்று தான் தெரிகிறது. சில ட்ரோல்களால் தான் இவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று சிலர் கூறி வருகின்றனர். அப்போ அவர் கமல் சார் நடிக்க அழைத்தாலும் போக மாட்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தில் இந்த நடிகரா இப்படி நடிச்சுருக்கது? இத நோட் பண்ணீங்களா மக்களே?

Leave a Comment