அய்யோ.., காப்பாத்துங்க.., கடலில் தத்தளித்த 4 இந்தியர்கள்., பரிதாபமாக போன உயிர்கள்.., என்ன நடந்தது?
பிலிப் தீவு பகுதியில் உள்ள கடலில் மூழ்கி மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணம் – பிலிப் தீவு:
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு பகுதியில் உள்ள கடலில் மூழ்கி மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் உயிரிழந்தவர்கள் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும்,மேலும் தூதரகம் சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.