என்னது.., சிம்புவுடன் கல்யாணமா? வரலட்சுமி கொடுத்த நச் பதில்.., என்ன சொல்லிருக்காங்க பாருங்களே!!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வரும் சிம்பு, தற்போது இவர் STR 48 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிம்புவின் திருமணம் பேச்சு அவ்வப்போது சோசியல் மீடியாவில் அடிபடுவது உண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிம்பு, சரத்குமார் மகளான வரலட்சுமியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தையில் அவர்களது குடும்பத்தினர் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திருமணம் குறித்து வரலட்சுமி முன்னாடி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அதில் அவர், “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, நான் யாரையும் காதலிக்கவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ மாட்டேன் என்று கூறியுள்ளார். இப்படி வரலட்சுமி கூறியுள்ள நிலையில், எப்படி சிம்புவை கல்யாணம் செய்ய சம்மதித்திருப்பார் என்று தெரியவில்லை. இது முற்றிலும் ஒரு பொய்யான வதந்தியாக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த் திருமணம் குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.