வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமாவங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா

வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா ? தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. 05.02.2024 முதல் 14.02.2024 வரை 10 நாட்கள் இந்த பயிற்சி வழங்க படுகிறது.

JOIN WHATSAPP GET BANK JOB UPDATES

வங்கிகளில் தங்க நகை கடன் பெறுவதற்கு முதலில் அதன் இன்றைய விலை மதிப்பை கண்டறிந்து பின்னர் தான் வழங்குவர். அந்த நகைகளின் தரத்தை கண்டறிவதே இந்த GOLD APPRAISER ன் வேலை ஆகும். இந்த வேலையை வாங்குவதற்கு அதற்குண்டான பயிற்சியை பெற்று சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். அந்த பயிற்சியை நம் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, செம்பு, பிளாட்டினம் ஆகியவற்றின் உலோக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, காரட் & காரட் தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை(Board Rate), ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் 99.9%, 91.6%, 85%, 80%, 75% தரம் அறிதல், ஆபரண கடனுக்கான கணக்கீடு முறை, போலி நகைகளை கண்டறிதல், ரத்தினங்கள் மதிப்பீடு முறை, ஹால் மார்க் தங்க அணிகலன்கள் கண்டறிதல் போன்றவை கற்று தரப்படும்.

NALCO வேலைவாய்ப்பு 2024 ! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

மேலும் இப்பயிற்சியில் படிக்கும் நபர்களுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பணி பெறுவதற்கான வழிமுறைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இது தவிர அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து விவாதிக்க படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற www.editn.in என்ற வலைதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தொலைபேசி வாயிலாக தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் படிக்க விரும்பும் நபர்கள் கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். bank gold appraiser course by government of tamilnadu.

அதிகாரப்பூர்வ அறிவிப்புclick here
பயிற்சிக்கு விண்ணப்பிக்கRegister Now
வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு,
இடிஐஐ அலுவலக சாலை,
ஈக்காட்டு தாங்கல்
சென்னை- 600 032.
PH: 044-22252081/ 22252082 , 8668102600/ 86681 00181, 7010143022.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *