சீமான் தாடிக்கு பின்னாடி இருக்கும் கதை இது தானா? வெளிவந்த உண்மை.., இத யாரும் எதிர்பார்கலயே!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விக்னேஷ் சிவன். தற்போது இவர் பிரதீப் ரங்க நாதனை வைத்து ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோவுக்கு அப்பா-வாக தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவர் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். சமீபகாலமாக சீமான் தாடியுடன் இருப்பதற்கு காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படத்தில் அவர் நடிக்கும் கதாபத்திற்காக தான், அவர் தாடி வளர்த்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.