அவதூறு வழக்கு விவகாரம்.., எம்.எஸ். தோனிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், அவரை பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாக ஜீ மீடியாவிற்கு எதிராக மகேந்திர சிங் தோனி வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமின்றி ரூ. 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்தார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், எம்.எஸ். தோனிக்கு ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதாவது  ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து எம்.எஸ். தோனி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளனர். 

அப்படி போடு.. 18 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேரும் திரிஷா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

Leave a Comment