அப்படி போடு.. 18 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேரும் திரிஷா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!அப்படி போடு.. 18 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேரும் திரிஷா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கிய நிலையில், படப்பிடிப்புக்காக வந்த த்ரிஷாவுக்கு மலர் கொடுத்து சிரஞ்சீவி  வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகல.., அதுக்குள்ள காவல்துறையிடம் சிக்கிய விஜய்யின் TVK உறுப்பினர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *