Home » சினிமா » கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகல.., அதுக்குள்ள காவல்துறையிடம் சிக்கிய விஜய்யின் TVK உறுப்பினர்கள்!!

கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகல.., அதுக்குள்ள காவல்துறையிடம் சிக்கிய விஜய்யின் TVK உறுப்பினர்கள்!!

கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகல.., அதுக்குள்ள காவல்துறையிடம் சிக்கிய விஜய்யின் TVK உறுப்பினர்கள்!!

பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 2ம் தேதி தனது அரசியல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சில எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. மேலும் மக்களுக்காக அவர் களத்தில் இறங்கி வேலை பார்க்க தான் இப்படி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று மக்கள் பலரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு விஜய் தலைமையில் இயங்கி வரும் TVK கட்சியின் நிறம், கொடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில்  தொண்டர்கள் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் விருகை பகுதி பொறுப்பாளரான வேல்முருகன்  ‘தமிழக வெற்றி கழகம்’ சார்பாக ‘விஜய் மக்கள் இயக்கம்’ கொடிக்கம்பத்தை வைத்துள்ளார். ஆனால் இது குறித்த எந்த ஒரு அனுமதியும் காவல்துறையிடம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் இருந்த மர்மம்.., வசமாக சிக்கிய பெண் யூடியூபர் – சிபிஐ வழக்கு பதிவு செய்து அதிரடி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top