Home » செய்திகள் » புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – ரசிகர்கள் உற்சாகம் !

புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – ரசிகர்கள் உற்சாகம் !

புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் - ரசிகர்கள் உற்சாகம் !

தற்போது புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித், இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தள பக்கத்தின் வழியாக இதனை உறுதிப்டுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஷிங் விளையாட்டு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகரான அஜித் குமார், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பெங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் “அஜித் கார் ரேஷிங்” என்ற புதிய கார் பந்தய அணியை தொடங்கியுள்ளார். அந்த வகையில் இந்த அணியின் ரேஷிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

IPL: ஐபிஎல்2025ல் வீரர்களைத் தக்கவைப்பதில் சிக்கல்? அணிகளுக்கு பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன்!

மேலும் அஜித்தின் இந்த கார் பந்தய அணியானது ஐரோப்பியாவில் நடக்கும் 24H பந்தயத்தில் போர்ஷே 992 GD3 CUP பிரிவில் பங்கேற்கும் எனவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தின் வழியாக, “கார் பந்தய அணியின் உரிமையாளர் என்பதை கடந்து, கார் ரேசிங்கிக்கும் திரும்பியுள்ளார் அஜித்குமார் என்று குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில் இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஷிங் விளையாட்டு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top