
கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ்: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகர் கருணாகரன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ்
அவருக்கு தென்றல் ராஜேந்திரன் (44) என்ற மனைவி இருக்கிறார். இப்படி இருக்கையில் அவர்கள் வீட்டில் இருந்து 59.7 சவரன் நகை சிறிது சிறிதாக மாயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர்களிடம் இருந்து எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இதனால் தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கருணாகரன் புகார் அளித்துள்ளார். எனவே அவர் புகார் கொடுத்த பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து தங்களது விசரணையை தொடங்கியது.
ஜெஃப்ரியை சிரித்து அசிங்கப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ் – கண்கலங்கி அழுத போட்டியாளர்!
இதையடுத்து வீட்டில் உள்ள அனைவரது கை ரேகையும் பதிவு செய்து ஆய்வு செய்து பார்த்ததில், கருணாகரன் வீட்டில் வேலை பார்த்த விஜயா என்ற விஜிலா மேரி (38) என்பவர் தான் திருடியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து, திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்
மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்