ஒருவழியா சிங்கிள் விரதத்தை முடிச்சுட்டாருப்பா? வாரிசு நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு? அதுவும் முக்கிய நட்சத்திரத்தின் மகளா?ஒருவழியா சிங்கிள் விரதத்தை முடிச்சுட்டாருப்பா? வாரிசு நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு? அதுவும் முக்கிய நட்சத்திரத்தின் மகளா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனால் அவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். அதன்படி தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதால் சிம்பு இதற்காக ஏராளமான பயிற்சிகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், தற்போது வரை சிம்பு கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து காதல் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு தற்போது தன்னுடன் ஒரு படத்தில் நடித்த வாரிசு நடிகையுடன் இணைய போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்த வரலட்சுமி சரத்குமாரை தான் STR திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இரு வீட்டார் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

“சிறகடிக்க ஆசை” ரோகிணியின் ரியல் கணவரையும், மகனையும்  பார்த்துள்ளீர்களா? வெளியான கியூட்டான புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *