வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா? கண்கலங்கி உதவி கேட்ட வீடியோ வைரல்!வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா? கண்கலங்கி உதவி கேட்ட வீடியோ வைரல்!

வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா: தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அந்த அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது சினிமா1 பிரியர்களுக்கு தெரிந்த ஒன்றே. அந்த அளவுக்கு காமெடி சீன்களை மக்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். அப்படி காமெடி என்று கொடுத்தால் நம் நினைவுக்கு முதலில் வருவது வைகை புயல் வடிவேலு2 தான். ஆனால் இவரை இந்த அளவுக்கு உயர்வதற்கு முக்கியமானவர்கள் என்று பார்த்தால் அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர்கள் தான். அப்படி அவருடன் சேர்ந்து ட்ராவல் செய்த நடிகர் தான் நடிகர் வெங்கல்ராவ். இவர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர்களது காம்போ பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் வெங்கல்ராவ் கண்கள் கலங்கிய படி உதவி கேட்டு வீடியோ போட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர்,” தமிழ் சினிமா நடிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் என்னுடைய  வணக்கம். நான் வெங்கல்ராவ் பேசுகிறேன். இப்போது நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஒரு கை, ஒரு கால் முழுவதும் செயலிழந்துவிட்டது. சொல்ல போனால் படுத்த படுக்கையாகவே இருக்கிறேன். என்னால் பழய மாதிரி சரளமாக பேசக்கூட முடியவில்லை. மாத்திரை வாங்க கூட பணம் இல்லை. யாராவது எனக்கு உதவினால் நன்றாக இருக்கும்” என திணறித் திணறி பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இவருக்கா இந்த நிலைமை என்று கூறி வருகின்றனர். மேலும் அவருக்கு யாராச்சும் உதவ வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். tamil cinema – vadivelu – comedy king maker – kollywood comedy actor

ஜூலை 26ல் “ராயன்” வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

  1. tamil cinema news 2024 ↩︎
  2. vaikai puyal vadivelu news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *