போட்றா வெடிய.., தளபதி விஜய் வீட்டில் இருந்து வந்த குட் நியூஸ்.., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர போராடும் நடிகர்களில் ஒருவர் தான் விக்ராந்த். இவர் தளபதி குடும்பத்தை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தாலும் கூட, அவருடைய படங்கள் பேசும் அளவுக்கு நல்ல ரீச்சை கொடுக்கவில்லை. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தில் இருந்து அவருடைய கெரியர் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் சீரியல் நடிகை  மானசா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் யஷ்வந்த் குறித்து விக்ராந்த் பெருமிதம் அடைந்துள்ளார்.

அதாவது விக்ராந்தின் மகன் யஷ்வந்த் தற்போது 14 வயதாகும் நிலையில் இப்பொழுது இவர் தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். இது குறித்து தனது வலைத்தள பக்கத்தில் என் மகனை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று விக்ராந்த் பதிவிட்டுள்ளார். தனது மகனை போல் விக்ராந்தும் கிரிக்கெட் அற்புதமாக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அய்யோ போச்சே., பாலு கூட காய்ச்சல., அதுக்குள்ள சரிந்து தரமட்டமான மூன்று மாடி கட்டிடம்., எழுந்த அழுகை ஓலம்!!

Leave a Comment