மீண்டும் இணையும் விஷால் முத்தையா கூட்டணி ! மருது திரைப்பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ள விஷால் !

மீண்டும் இணையும் விஷால் மற்றும் முத்தையா கூட்டணி. தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் விஷால். தற்போது இவர் நடிகர் சங்க தலைவராக இருந்து வருகிறார். மேலும் விஷால் புதிய கட்சி ஒன்றை தொடங்கி அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனர் முத்தையாவுடன் விஷால் திரைப்படம் ஒன்றில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார். மருது திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா ! கூலி படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு ! உடனடியாக நீக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை !

மருது திரைப்படத்தை போன்று இந்த திரைப்படமும் கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment