தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா சினிமாவில் தொடர்ந்து சிக்ஸர்களை அடித்து வரும் நிலையில், இப்பொழுது கிரிக்கெட்டிலும் தனது நட்சத்திர ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டார்.

அதாவது அடுத்த வருடம் நடக்க இருக்கும் ISPL(Indian Street Premier League) போட்டியில் கிட்டத்தட்ட சென்னை, ஹைதராபாத், மும்பை, ஸ்ரீநகர் மற்றும் பெங்களூர் என 5 அணிகள் பங்கேற்கிறது. இதில் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாக தனது X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *