குழந்தையாக இருக்கும் போதே பாலியல் தொல்லை.., பேபி வந்ததும் மன்னிப்பு கேட்ட நபர்.., பிரபல நடிகை வேதனை!
சுருதி ரஜினிகாந்த்
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் சுருதி ரஜினிகாந்த். அவர் மாடலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்பு தொகுப்பாளராக களமிறங்கி தற்போது வெள்ளித்திரையில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதன்படி அவர் குஞ்சல்தோ, பத்மா, நீரஜா, குயின் எலிசபெத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.அதில் அவர், ” அப்போது எனக்கு விவரம் தெரியாத வயசு.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த காலம் எனக்கு இருள் காலமாக தான் இருந்தது. ஏனென்றால் என்னுடைய உறவினர் ஒருவரால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்து ஒரு கட்டத்தில் தெரிய வந்தது. அதை யாரிடமும் நான் சொல்லவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய உறவினர் என்பதால் தான் சொல்லவில்லை. சமீபத்தில் தான் அந்த நபருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி மன்னிப்பு கேட்டார். இப்போது கூட அவரை என்னால் அவமானப்படுத்த முடியும் என்று பயந்து போய் இருப்பார் என்று வேதனையுடன் கூறினார். மேலும் குழந்தைகள் இந்த விஷயத்தில் தைரியமாக எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.