என்னது.., நடிகை சமந்தாவின் மாஜி கணவருக்கு திருமணமா? மவுனம் களைத்த முன்னணி நடிகை?

பான் இந்திய நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது எந்த படத்திலும் நடிக்காமல் தனது தோல் நோய்க்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கம் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை   விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் ஹோட்டல் ஹோட்டலாக ஊர் சுற்றி டேட்டிங் செய்து வந்தனர்.

 நடிகை  சமந்தா நாக சைதன்யா
நடிகை சமந்தா நாக சைதன்யா

இதனால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை சோபிதா துலிபாலா முதன் முதலாக மவுனம் கலைத்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, எங்களுக்குள் என்ன நடக்கிறது தெரியாமல் சோசியல் மீடியாவில் எழுதுபவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. இதனை விட்டுட்டு அவரவர் சொந்த வாழ்க்கையை பாருங்கள் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது இவர்களுக்குள் தவறான உறவு எதுவும் இல்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. 

 நடிகை  சமந்தா நாக சைதன்யா
நடிகை சமந்தா நாக சைதன்யா

Leave a Comment