அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களாஅபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா

   பெரும்பாலான மக்களின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது. தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர்கள் படித்து முடித்து விட்டு நகரத்திற்கு வேலைக்கு சென்று அங்கேயே சொந்த வீடு வாங்குகின்றனர். நகரங்களில் சொந்தமாக தனி வீடு என்பதற்கு சாத்தியங்கள் குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி கட்டிடம் என்று சொல்லக்கூடிய அபார்ட்மெண்ட் தான். இத்தகைய புதிய அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா சில முக்கிய விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா ! இந்த திட்டம் ரொம்ப முக்கியம்  !

அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா

அபார்ட்மெண்ட் :

   நகரங்களில் வீடு வாங்குபவர்கள் அதிகரித்து விட்டனர். ஒவ்வருவருக்கும் தனி வீடு என்பது தற்போது சாத்தியமற்றது. அதனாலேயே குடியிருப்புகளின் மேலே மேலே வீடுகளை கட்டும் நிலை உருவானது. தற்போது 30க்கும் மேல் தளங்கள் கொண்ட அபார்ட்மெண்ட்கள் தற்போது பெருகி விட்டது. 

அபார்ட்மெண்ட் வாங்கியதற்கான சான்று :

   தரையில் 10,000 சதுர அடியில் மூன்று அறைகள் கொண்டு பத்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்றால் அதனை போல் தான் மாடியில் இருக்கும் வீடுகளும் கட்டப்பட்டு இருக்கும். அதில் இருக்கும் ஒரு வீட்டினை மட்டும் அபார்ட்மெண்ட் உரிமையாளர் நமக்கு பத்திரம் எழுதி கொடுப்பர். இதுவே ஒரு அபார்ட்மெண்ட் நாம் வாங்கி இருக்கின்றோம் என்பதற்கான சான்று ஆகும்.  

நம் வீட்டின் அளவு என்ன : 

   10,000 சதுர அடியில் பத்து வீடுகள் இருக்கின்றது எனில் நம்முடைய சொந்த நிலத்தின் அளவு ஆயிரம் ஆகும். அதாவது மொத்த சதுர அடியில் இருந்து வீடுகளின் எண்ணிக்கையை வகுக்க வேண்டும். அப்போது நமக்கு கிடைக்கும் தொகை தான் நம் வீட்டின் அளவு ஆகும். இந்த ஆயிரம் சதுர அடியுடன் கார் பார்க்கிங் , குழந்தைகள் விளையாட்டு மையம் , உடற்பயிற்சி கூடம் , நீச்சல் குளம் , துணி துவைக்கும் இடம் போன்ற பல சிறப்பசங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

பழைய வாகனம் வாங்க போறீங்களா ! இதுவும் முக்கியம் !

உரிமை கொண்டாட முடியாது :

   நாம் வங்கிய அபார்ட்மென்டில் நமக்கு என்று வழங்கப்பட்டு இருக்கும் இடங்களை பொதுவாக நாம்  பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மாடிப்படி , பால்கனி போன்ற இடங்களை அனைவரும் பயன்படுத்த முடியும். இந்த குறிப்பிட்ட இடம் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.   

கவனிக்க வேண்டிய ஆவணங்கள் :

 1. Proceeding Certificate ( நடவடிக்கை சான்றிதழ் )

    மாநகராட்சி அல்லது நகராட்சிகளில் அபார்ட்மெண்ட் கட்ட போகின்றேன் என்று கட்டிடம் கட்டும்  நிறுவனம் கட்டிடம் கட்ட வாங்கும் அனுமதி சான்றிதழ் ஆகும்.

2. நிலத்தின் DTCP ஒப்புதல் 

3. கட்டிட திட்ட ஒப்புதல் 

   கட்டிட திட்ட ஒப்புதலில் இருக்கும் படி தான் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் ஒருவேளை நாம் வாங்கி இருக்கும் அபார்ட்மெண்ட் விற்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

4. கட்டிட திட்ட ஒப்புதலில் நாம் வாங்கும் தளம் பதிவாகி இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.  

5. பட்டா 

   நாம் வாங்கும் அபார்ட்மெண்ட் நிலம் புறம்போக்கு நிலமா அல்லது யாரின் பெயரில் இருக்கின்றது என்பதை பட்டா மூலமே அறிய முடியும். எனவே அபார்ட்மெண்ட் வாங்கும் முன் பட்டா வாங்கி சரிபார்த்து வாங்க வேண்டும் 6. மூலப்பத்திரம் :

7. EC 

   வாங்க இருக்கும் அபார்ட்மெண்ட் நிலத்தின் EC பார்த்து நிலத்தில் ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும்.

   8. அபார்ட்மெண்ட் இடிக்க நேரிட்டால் நமக்கு கிடைக்கும் நிலத்தின் அளவு பத்திரத்தில் சரியாக இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.  

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

பொதுவான தகவல் :

1. அபார்ட்மெண்ட் வாங்கும் அல்லது கட்டிடம் கட்டும் உரிமையாளர் பற்றி அறிதல் 

   அபார்ட்மெண்ட் வாங்க இருக்கும் உரிமையாளர் மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனம் பற்றி அறிந்து இருத்தல் வேண்டும். இதற்க்கு முன் அபார்ட்மெண்ட் ஏதும் கட்டி இருக்கின்றார்களா , கட்டிய வீடுகளின் மதிப்பு பார்த்த பின் தான் வாங்க வேண்டும். குறைந்தது 15 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிடத்துறையில் இருக்கும் நிறுவனத்திடம் அபார்ட்மெண்ட் வாங்குவது நல்லது. 

2. செய்து கொடுக்கப்படும் வசதிகள் :

   அபார்ட்மெண்ட் சார்பில் செய்து கொடுக்கப்படும் வசதிகள் பற்றி விசாரிக்க வேண்டும். 

3. அபார்ட்மெண்ட் யூனியன் : 

   நாம் வாங்கும் அபார்ட்மெண்ட்க்கு என்று தனி யூனியன் , வாட்ச் மேன் என்பது எல்லாம் இருக்கின்றதா என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அங்கிருக்கும் வீடுகளுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்வதற்கு எதுவாக இருக்கும்.  

4. வாடகைக்கு என்று அபார்ட்மெண்டில் தங்க இருக்கின்றீர்கள் என்றால் விடுகளில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் வீட்டின் உரிமையாளர் ஏற்க வேண்டும் என்று முன்னரே அறிவிக்க வேண்டும்.  

அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா

அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்ற ஆசையில் வாங்கி விட்டு பின் வருந்துபவர்கள் ஏராளம். இத்தகைய சில ஆவணங்கள் மற்றும் பொதுவான குறிப்புகளை அறிந்த பின்னரே அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும். இவைகள் எல்லாம் அறிந்து நாம் அபார்ட்மெண்ட் வாங்கும் போது நமக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிரச்சனைகள் என்பது வராமல் தடுக்க முடியும். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *