மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023

   மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வு சங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவுப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு’தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.

மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023

மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   நாகப்பட்டினம் மக்கள் நலவாழ்வு சங்கம் ( District Health Society )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

   திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme Administrative Assistant ) பணியிடங்கள் நாகப்பட்டினம் DHSல் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

   அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் :

   1. கணினியில் MS Officeல் ஒரு ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.

   2. கணக்கு பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் திறமைகள் பெற்று இருக்க வேண்டும்.

NIRTல் data entry வேலைவாய்ப்பு ! நேர்காணல் மட்டுமே ! 17,000 சம்பளம் !

வயதுத்தகுதி :

   நாகப்பட்டினம் DHSல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 45 வயதிற்குள் இருக்கும் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

   திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 12,000 என தேசிய நலக்குழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

   02.10.2023ம் தேதி மாலை 4மணிக்குள்க்குள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :

   DHSல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் :

  1. கல்வி சான்றிதழ் ஜெராக்ஸ் 

  2. மதிப்பெண் பாட்டியல் ஜெராக்ஸ் 

  3. இருப்பிட சான்றிதழ் 

  4. சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் 

  5. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

முக்கிய குறிப்பு :

   விண்ணப்பபடிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் அனைத்தும் இணைத்து சுய கையொப்பம் இட்ட பின் தான் விண்ணப்படிவத்தினை அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

   நிர்வாக செயலாளர் ,

   மாவட்ட சுகாதாரச் சங்கம் ,

   சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ,

   ஆட்சியர் அலுவலகம் முதல் நுழைவு வாயில் ,

   நாகப்பட்டினம் – 611003 ,

   தமிழ்நாடு.

   தொலைபேசி எண் : 04365 253036.

விண்ணப்பக்கட்டணம் :

   திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்படிவமானது நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எனவே விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

   நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் காலியாக இருக்கும் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *