லட்சுமி மேனனுக்கு அடித்த ஜாக்பாட்.., பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் கூட்டணி வைத்து அசத்தல் – புகைப்படம் இதோ!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் லட்சுமி மேனன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவர் நினைத்ததை போல் வெற்றியை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்து வந்த இவர், தற்போது ஒரு படம் வாய்ப்பு கூட இல்லாமல் தவித்து வந்த நிலையில், இப்போது பிக்பாஸ் நடிகருடன் ஜோடி சேர இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்று டைட்டிலை அடுத்து சென்றவர் தான் ஆரி. தற்போது ராஜசேகர பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.