பிரபல நடன கலைஞரும் பிக்பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராம் தற்போது அரசியலில் களமிறங்கி ஒரு கை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பாஜக கட்சியில் செயல்பட்டு வந்த நிலையில், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகிய அவர், தற்போது அதிமுக கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், இந்த கட்சியில் யார் யார் சேர இணைய போகிறீர்கள் என்பது குறித்து ஒரு பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் காயத்ரி ரகுராம் விஜய்யின் கட்சியில் இணைய போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது இது குறித்து காயத்ரி ரகுராம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயலாற்றக் கூடிய ஒரே இடம் அதிமுக தான். எனவே நான் அதிமுகவுடன் இணைந்து தான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.