விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வந்த பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இதில் அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். மணி சந்திரா ரன்னர் அப் ஆன நிலையில் மாயா கடைசியாக வெளியே சென்றார். மேலும் மாயா தான் இந்த வட்டம் டைட்டில் அடிப்பார் என பல கருத்துக்கள் எழுந்த நிலையில் செகண்ட் இடத்தில் கூட பிடிக்காதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அர்ச்சனா விஜய் டிவிக்கு பணத்தை கொடுத்து டைட்டிலை வாங்கியதாக சோசியல் மீடியாவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் இருந்து கடைசியாக வெளியேறிய மாயா கிருஷ்ணன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது அதில் மக்களின் உண்மையான டைட்டில் வின்னர் மாயா என்று ரசிகர் ஒருவர் ஸ்டோரி வைத்திருந்த நிலையில், அதற்கு மாயா பணம் கொடுத்து வேண்டும் என்றால் நீங்கள் கோப்பையை தட்டிச் செல்லலாம். ஆனால் மக்களின் இதயங்களில் நான் இடம் பிடித்து விட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் அவர் டைட்டல் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் போட்டுள்ளார் என்றும், அப்ப அர்ச்சனா பணம் கொடுத்து தான் டைட்டில் வாங்கினாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.