பிக் பாஸ் சீசன் 7பிக் பாஸ் சீசன் 7

   பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது. பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருகிக்கின்றார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது  ! 

பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் :

   விஜய் தொலைக்காட்சியில் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். தற்போது வரையில் ஆறு சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கின்றார். ஏழாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் , யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வருகின்ற 1ம் தேதியில் இருந்து ஆரம்பமாக இருக்கின்றது. இந்த சீசனிலும் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்க்கு என்று கமல்ஹாசன் 150 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் இவர் தானா  !

இரண்டு வீடு :

   பிக் பாஸ் வீட்டிற்குள் அனைத்து போட்டியாளர்களும் விளையாடுவர். ஆனால் எப்போதும் போல் இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடு என்று ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகள் பலமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இரண்டு வீடுகள் என்றதுடன் ரசிகர்களுக்கு பல குழப்பங்களும் , கேள்விகளும் எழுந்துள்ளது. 

போட்டியாளர்கள் யார் :

   நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் போட்டியாளர்கள் யார் உள்ளே செல்வார்கள் என்ற தகவல் வெளியாவது வழக்கம் தான். அதன் படி நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றது. இந்நிலையில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல இருக்கின்றனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

  1. ரவீனா ( மௌனராகம் சீசன் 2 – கதாநாயகி )

  2. ஜோவிகா ( பிக் பாஸ் போட்டியாளர் வனிதாவின் மகள் )

  3. தர்ஷா குப்தா ( தொலைக்காட்சி , சினிமா நடிகை )

  4. இந்திரஜா ( ரோபோ சங்கர் மகள் மற்றும் பிகில் பட நடிகை )

  5. சத்யா ( காண காணும் காலங்கள் நடிகர் )

  6. விஸ்ணு ( ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் கதாநாயகன் , திரைப்பட நடிகர் )

  7. பப்லு ( அவள் வருவாளா திரைப்பட வில்லன் , சீரியல் நடிகர் )

  8. நிலா 

  9. நிவிஷா ( சீரியல் நடிகை )

10. ஓவியா ( களவாணி பட நடிகை , பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் )

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்த்திட இங்கே கிளிக் செய்யவும்

11. அசிம் ( பகல் நிலவு சீரியல் கதாநாயகன் , பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் )

12. குமரன் ( பாண்டியன் ஸ்டார் சீரியல் கதாநாயகன் )

13. அப்பாஸ் ( திரைப்பட நடிகர் )

14. அனன்யா ( மாடல் )

15. ஸ்ரீதேவி ( விஜயகுமார் மகள் , தித்திக்குதே கதாநாயகி )   

16. ஜாக்குலின் ( விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி )

17. ரக்ஷன் ( நிகழ்ச்சி தொகுப்பாளர் , நடிகர் )

18. மா.கா.பா.ஆனந்த் ( நிகழ்ச்சி தொகுப்பாளர் )

19. அர்ச்சனா ( நடிகை , நிகழ்ச்சி தொகுப்பாளர் , பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர் )

20. ரஞ்சித் ( செய்தி வாசிப்பாளர் )

பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் சீசன் 7

மேலே சொன்ன இந்த இருபது பேர்கள் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. யார் எல்லாம் வீட்டின் உள்ளே செல்கின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிக் பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடு இருப்பதால் சண்டை மற்றும் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வார ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொடங்க இருக்கின்றது. பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த சீசன் எதிர்பார்ப்பினை தருமா அல்லது ஏமாற்றத்தினை அளிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *