கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம். நம்மில் பலர் குடும்பத்தை பிரிந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டு வேலை பார்க்கின்றனர். இதனால் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் கனடா நாட்டில் வசிக்கும் வெளிநாடுகளை சேந்தவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வசிக்கும் வகையில் சூப்பர் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்களது பெற்றோர்களை அழைத்து வர சூப்பர் விசா என்ற திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற உறவினர்கள் கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?

மேலும் கனடாவிற்கு சென்ற பிறகு விசாவின் கால வரம்பை நீட்டித்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2020 ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *