கேப்டன் மில்லர் திரை விமர்சனம் :
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் சேர்ந்து நடித்துள்ள இப்படத்தின் திரை விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வழக்கம் போல நடிப்பு மிருகமாக தனுஷ் நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இவருக்கு ஈடாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். குறிப்பாக பிரியங்கா மோகன் நடிப்பில் தனுஷையே தூக்கி சாப்பிட்டார் என்றே சொல்ல வேண்டும். படம் முழுக்க துப்பாக்கி சண்டையால் தெறிக்க விட்டுள்ளார் இயக்குனர். மேலும் இந்த படத்துக்கு கூடுதல் பலமாக ஜிவி பிரகாஷ் குமார் இசை இருந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்தாமா ஏய்.., மாலத்தீவில் “எதிர்நீச்சல்” ஜனனி செய்த காரியம்…, குணசேகரன் மீது இருந்த பயம் போயிருச்சு?
அதுமட்டுமின்றி படத்தோட இன்டர்வெல் பிளாக் இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு சும்மா தெறிக்க தெறிக்க எடுத்துள்ளார். இப்படம் 1920ல் நடந்த சம்பவத்தை பற்றி எடுத்துள்ளதால் இப்ப இருக்கும் 2K கிட்ஸ்க்கு பிடிக்க வாய்ப்பில்லை. மேலும் படத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் தான் காமெடி இருக்கிறது. அது படத்தோட மைனஸ் என்று சொல்லலாம். பாடல், படத்தொகுப்பு எல்லாமே நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படத்துக்கு ரேட்டிங் 5 க்கு 4 கொடுக்கலாம்.