Home » செய்திகள் » மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நிலவிய மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த விடுமுறை நாட்களை ஈடுகட்டும் விதமாக தொடர்ந்து 5 சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில்  முதன்மை கல்வி அலுவலர் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் வருகிற பிப்ரவரி 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

விஜய் சார் வேண்டாம்.., தளபதிக்கு இந்த விஷயத்தில் அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top