வணிக  சிலிண்டர் விலை அதிரடியாக ரூ 19 குறைவு - உழைப்பாளர் தினத்தில் வந்த குஷியான செய்தி!!வணிக  சிலிண்டர் விலை அதிரடியாக ரூ 19 குறைவு - உழைப்பாளர் தினத்தில் வந்த குஷியான செய்தி!!

வணிக  சிலிண்டர் விலை அதிரடியாக ரூ 19 குறைவு: சிலிண்டர் எரிவாயு விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள்  ஒவ்வொரு மாத தொடக்கத்தில் மாற்றி கொண்டே வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது  வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில்  19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டருக்கான விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டு, மொத்தம் ரூ. 1,911க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வணிகம் செய்யும் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். மேலும் தேர்தல் நேரத்தில் தற்போது சிலிண்டர் விலை குறைந்துள்ளதால், பல்வேறு கருத்துக்கள் சோசியல் மீடியாவில் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு சிலிண்டர் ரூ.818.50 என்ற விலையிலே விற்கப்பட்டு வருகிறது. 

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் புதிய இணையதளம் – வழக்கு விசாரணையை நேரலையில் பார்க்கலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *