குக் வித் கோமாளி  சீசன் 5ல்  கோமாளியாக இந்த சீரியல் நடிகையா? அப்ப சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது?குக் வித் கோமாளி  சீசன் 5ல்  கோமாளியாக இந்த சீரியல் நடிகையா? அப்ப சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது?

குக் வித் கோமாளி  சீசன் 5ல்  கோமாளியாக இந்த சீரியல் நடிகையா? – விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இதுவரை நான்கு சீசன்களை கடந்த இந்த ஷோ 5 சீசனில் தடம் வைத்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த புதிய சீசனில் வெங்கடேஷ் பட் விலகியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா ஆரம்பித்து தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்பான் என நிறைய பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு பிரபலம் கலந்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 5ல் புதிய கோமாளியாக சீரியல் நடிகை ஷப்னம் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *