CSC Aadhaar UCL Registration 2024 ! ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?CSC Aadhaar UCL Registration 2024 ! ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?

CSC Aadhaar UCL Registration 2024. இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையம் ஆகும். ஆதார் புதுப்பித்தல்/திருத்தம் போன்ற சேவைகளை வழங்கவுதற்காக உருவாக்கப்படும் மையமத்தை ஆரம்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள கீழே காணலாம்.

இந்திய அரசின், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால், தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது பொதுவான சேவை மையங்கள் (CSCs). விவசாயம், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, FMCG தயாரிப்புகள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், பயன்பாட்டுக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் அரசு, சமூக மற்றும் தனியார் துறை சேவைகளை வழங்குவதற்கான முன்-இறுதி சேவை வழங்கல் புள்ளிகளாக இம்மையங்கள் கருதப்படுகின்றன.

இந்த மையம் தொடங்க VLEஆக இருக்கவேண்டும்.

VLE என்பவர் கிராம அளவிலான தொழில்முனைவோர் ஆவர். அவர் சொந்தமான CSC கடையிலிருந்து இறுதி நுகர்வோருக்கு பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை வழங்குகிறார்.

பொது சேவை மையம் சொந்தமாக தொடங்க விருப்புவோர், VLEஆக பதிவு செய்யவேண்டும். ஆன்லைன் மூலம் அரசாங்கத்தின் அதிகார பூர்வ இணையதளம் வாயிலாக தேவையான தகவல் கொடுத்து பதிவு செய்து கொள்ளவேண்டும்.

இணையதள முகவரி: https://register.csc.gov.in

கிராமப்புற/நகர்ப்புறங்களில் CSCயை அமைத்து நடத்த விரும்பும் ஒருவர், அந்த கிராமப்புற/நகர்ப்புற பகுதியில் சாதாரண குடியிருப்பாளராக இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் CSCயை அமைத்து இயக்க விரும்பும் பகுதியின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜெராக்ஸ் மெஷின் பிறந்த கதை கையால் எழுத முடியாதவர் கண்டுபிடித்த அதிசயம் அதுவே அவரை பல கோடிக்கு அதிபதி ஆக்கிய வரலாறு !

இதில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு போதுமான வணிக இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட இடம் குறைந்தபட்சம் 50 சதுர அடி அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும். மேலும், குறைந்தபட்சம் 1 கணினி, அச்சு இயந்திரம், பிராட்பேண்ட் இணைப்பு, வங்கி /ஆதார் / DigiPay சேவைகளுக்கு தேவையான பயோமெட்ரிக் அல்லது ஐரிஷ் சாதனங்கள் போன்றவை வைத்திருக்கவேண்டும்.

CSC அமைக்க விரும்பும் நபர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

டெலி-தொழில்முனைவோர் படிப்பு (TEC) அல்லது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் & ஃபைனான்ஸ் வழங்கும் வங்கி நிருபர்(BC) / வங்கி வசதியாளர்(BF) படிப்பு அல்லது CSC SPV ஆல் பரிந்துரைக்கப்படும் வேறு ஏதேனும் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூரித்தி செய்யும் நபர்கள் VLEஆக பதிவு செய்து சொந்தமாக CSC மையம் தொடங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed