ராஜமௌலி இயக்கத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் டேவிட் வார்னர்
பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட 1000 கோடி வசூல் செய்த படங்களை இயக்கியவர் தான் ராஜமௌலி. தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். அவர் இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் சிறப்பானவர் என்று அவ்வவ்போது நிரூபித்து வருகிறார். குறிப்பாக விளம்பர படங்களில் தான் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் டேவிட் வார்னரிடம் அவர் விளையாடும் கிரிக்கெட் மேட்சைப் ரசிகர்கள் பார்ப்பதற்கான டிக்கெட்டுக்கு டிஸ்கவுண்ட் கேட்கிறார். அதற்கு கிரெட் ஆப் இருந்தால் தாராளமாக கிடைக்கும் என்று கூறுகிறார். அதற்கு ராஜமௌலி அது இல்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். அதற்கு டேவிட் வார்னர் தனக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார். அடுத்தடுத்து வரும் காட்சிகள் காமெடியாக இருக்கிறது. டேவிட் வார்னர் ஒருவேளை தென்னிந்திய சினிமாவில் நடித்தால் இப்படி தான் இருக்கும் என்று உணர்த்தும் விதமாக இந்த வீடியோ இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.